325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம்

325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம்

இவ்வசனத்தில் (34:12) ஸுலைமான் நபிக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சராசரியாக காற்றின் வேகத்தையும் கூட அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகிறான்.

நம் மீது வீசுகின்ற காற்று நம் மீது பட்டு, பூமியை ஒரு சுற்று சுற்றி வந்து மறுபடியும் நம் மீது பட வேண்டுமானால் அதற்கு சுமார் இரண்டு மாத காலம் தேவைப்படும். ஏனென்றால் சராசரியாக காற்று 25 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்றது. இந்த வேகத்தில் வீசுகின்ற காற்று பூமியைச் சுற்றி வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும்.

காற்று, ஒரே சீராகச் சுற்றி வருகிறது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. ஸுலைமான் என்ற இறைத்தூதருக்கு தனிச் சிறப்பாக அல்லாஹ் காற்றை வசப்படுத்திக் கொடுத்தபோது அவருக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்ட காற்று இரண்டு மாதத்தில் திரும்ப ஒரு சுற்று சுற்றி விட்டு வரும் என்று தான் அல்லாஹ் கூறுகிறான்.

இங்கே ஸுலைமான் என்ற இறைத்தூதருக்கு உரிய சிறப்பைச் சொன்னாலும் சராசரியான காற்றின் வேகத்தையும், பூமியின் சுற்றளவையும், பூமியுடைய சுழற்சி வேகத்தையும் கணக்கிட்டுப் பேசும் ஒரு விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் இதைப் பேசியிருக்கிறது.

இது நிச்சயமாக மனிதனின் சொல்லாக இருக்க முடியாது; இறைவனின் சொல்லாகத் தான் இருக்க முடியும் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

To read this explanation in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: July 11, 2009, 8:30 PM Views: 569

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top