296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது "பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்'' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும், மனிதனின் கருவும் இந்தக் கால கட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும். மூன்று மாதங்கள் கழிந்த பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.

இதைத் தான் "பின்னர் வேறு படைப் பாக மாற்றினோம்' என்ற சொற்றொடர் மூலம் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

அதிக விபரத்திற்கு இதே பகுதியில் 314வது குறிப்பைக் காண்க!

To read this explanation in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: July 11, 2009, 7:18 PM Views: 598

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top