29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த ந

29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள் 

"ராஇனா' என்ற சொல் இரண்டு அர்த்தங்களுடைய சொல்லாகும். "எங்களைக் கவனித்து வழி நடத்துங்கள்' என்பது ஒரு பொருள். "எங்களின் ஆடு மேய்க்கும் இடையரே' என்பது மற்றொரு பொருள்.

யூதர்களில் நயவஞ்சகர்கள் இரண்டாவது அர்த்தத்தைத் தம் மனதுக்குள் நினைத்துக் கொண்டு "ராஇனா' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறி அற்ப திருப்திப்பட்டுக் கொண்டார்கள். முஸ்லிம்களோ முதல் அர்த்தத்தில் இதனைப் பயன்படுத்தி வந்தனர்.

எனவே தான் முதல் அர்த்தத்தை மட்டும் தரக்கூடிய "உன்ளுர்னா' என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பயன்படுத்துமாறு முஸ்லிம்களுக்குத் திருக்குர்ஆன் கட்டளையிட்டது.

அது போலவே "அதஃனா' என்ற சொல் "கட்டுப்பட்டோம்' என்ற ஒரு பொருளைக் கொண்ட சொல்லாக இருந்தாலும் "அதஃனா' என்று கூறுவது போல் பாவனை செய்து "அஸய்னா' என்று நயவஞ்சகர்கள் நபிகள் நாயகத்தை நோக்கிக் கூறி வந்தனர். இதன் பொருள் "மாறு செய்தோம்'' என்பதாகும். இவர்களின் இந்தப் போக்கு தான் இவ்வசனங்களில் (2:104,4:46) சுட்டிக் காட்டப்படுகிறது.

10.07.2009. 03:20




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
95 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி