245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரா

245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை

இறைவனின் தூதர்களில் இப்ராஹீம் நபியை உயர்ந்த இடத்தில் வைத்து திருக்குர்ஆன் பேசுகிறது. அவர்கள் அல்லாஹ்வுக்கே உற்ற நண்பராக இருந் தார்கள் என்ற அளவுக்கு அவர்களின் தகுதியை உயர்த்துகிறது. அவர்களது வழியைப் பின்பற்றுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையும் இடுகிறது.

இத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கின்ற இப்ராஹீம் நபியவர்கள், சிலை வணங்காது தமது வழித் தோன்றல்களைப் பாதுகாக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். (திருக்குர்ஆன் 14:35) ஆனால் அவர்களின் வழித் தோன்றல்கள் சிலை வணங்குவோரானார்கள்.

மேலும் தமது வழித் தோன்றல்கள் நல்லவர்களாக நடக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். இறைவனோ இதனை நிராகரித்து அநியாயம் செய்தவர்கள் விஷயத்தில் உமது பிரார்த்தனை ஏற்கப்படாது என்று அறிவிக்கிறான். (திருக்குர்ஆன் 2:124)

எவ்வளவு பெரிய தூதராக இருந்தாலும் அவர்களது பிரார்த் தனைகள் அனைத்தும் ஏற்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இறைவன், தான் நாடியதை மட்டுமே செய்வான் என்ற ஏகத்துவக் கோட்பாட்டை இவ்வசனம் உறுதியாக நிலை நாட்டுகிறது.

11.07.2009. 03:14




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
97 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி