234. நபிகள் நாயகத்துக்கு மறைவானவை தெரி

234. நபிகள் நாயகத்துக்கு மறைவானவை தெரியுமா?

இவ்வசனங்களில் (72:26-28) இறைவன் தனது மறைவான விஷயங்களை, தான் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான் என்று கூறப்படுகின்றது.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான அனைத்து விஷயங்களும் தெரியும்; அவர்களுக்குத் தெரியாத மறைவான விஷயங்களே கிடையாது'' என்று கூறுபவர்கள் இவ்வசனங்களைத் தமக்குரிய சான்றாகக் கருதுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்று தெளிவாகக் கூறும் 6:50, 7:188, 11:31 போன்ற பல்வேறு வசனங்களைப் புறக்கணித்து விட்டு, இவ்வசனங்களைத் தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.

இவர்களின் வாதத்திற்கு இவ்வசனத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. ஏனெனில், இவ்வசனத்தில் எந்த மறை வான விஷயங்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் சொல்லப்பட வேண்டுமோ அந்த மறைவான விஷயங்களை, தான் பொருந்திக் கொண்ட தூதர் வழியாக அறிவிப்பான் என்றே கூறப்பட்டுள்ளது.

அந்த மறைவான விஷயங்களை மக்களுக்குச் சரியாக அந்தத் தூதர்கள் சொல்லி விட்டார்களா என்பதைக் கண்காணிக்க அவர்களுக்கு முன்னும் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்தி இருப்பதாகவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

எனவே மறுமை, சொர்க்கம், நரகம், மண்ணறை வாழ்வு போன்ற முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டிய மறைவான செய்திகளை மக்களுக்குச் சொல்வதற்காகத் தூதர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பானே தவிர, இறைவனுக்குத் தெரியும் அனைத்து மறைவான செய்திகளையும் தூதர்களுக்கு அறிவித்துக் கொடுக்க மாட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவான விஷயங்களை அவர்கள் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே நமக்கும் சொல்லிச் சென்று விட்டதால் அவர்களுக்குத் தெரிந்த மறைவான செய்திகள் அனைத்தும் நமக்கும் தெரிந்ததாகி விடுகின்றன.

இந்தக் கருத்துக்களெல்லாம் இவ்வசனங்களுக்கு உள்ளேயே அடங்கி யிருந்தும், இல்லாத கருத்தை இவர்கள் வலிந்து திணிக்கிறார்கள். இவர்களின் வாதத்திற்கு இந்த வசனங்களில் எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் விபரத்திற்கு இதே பகுதியில் 104வது குறிப்பைக் காண்க!

11.07.2009. 02:57




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
110 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி