232. துரோகம் செய்யவில்லை' என்று கூறிய

232. "துரோகம் செய்யவில்லை' என்று கூறியது யார்?

12:51 வசனத்தில் கூறப்படுவது அஜீஸின் மனைவியுடைய கூற்று என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. தொடர்ந்து வருகின்ற இரு வசனங்கள் யாருடைய கூற்று என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

சிலர் அஜீஸின் மனைவியுடைய கூற்றுத் தான் என்று கூறுகின்றனர். ஆனால் இவ்வசனங்களில் இடம் பெற்றுள்ள சொற்கள் இது அவருடைய கூற்றாக இருக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

"அவர் மறைவாக இருக்கும் போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காக' என்ற சொற்றொடர் 52வது வசனத்தில் இடம் பெற்றிருக்கிறது. இதை நிச்சயமாக அஜீஸின் மனைவி கூறியிருக்கவே முடியாது.

ஏனென்றால் அவர் துரோகம் செய்திருக்கிறார். தான் செய்த தவறை முந்தைய வசனத்தில் ஒப்புக் கொண்டும் இருக்கிறார். "நான் தான் தவறு செய்திருக்கிறேன், இவர் உண்மை சொல்கிறார்'' என்று கூறிவிட்டு, நான் எந்தத் துரோகமும் செய்யவில்லை என்றும் கூறுவாரானால் முதலில் கூறியதற்கு முரணாக ஆகிவிடும். எனவே "மறைவில் துரோகம் செய்யவில்லை'' என்று கூறுவதற்கு யூஸுஃப் தான் தகுதி படைத்தவர்.

52 வது வசனம் யூஸுஃபுடைய கூற்று என்றால் அதற்கடுத்த (12:53) வசனமும் அவரது கூற்றாகத் தான் இருக்க முடியும். இதை அஜீஸின் மனைவியின் கூற்று என்று கூறுவது தவறு என்பதை 52வது வசனத்தைக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

11.07.2009. 02:51




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
106 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி