229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா?

229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா?

"அவளும் அவரை நாடினாள்; அவரும் அவளை நாடி விட்டார்'' என்ற சொற்றொடரிலிருந்து (12:24) "ஆரம்பத்தில் யூஸுஃப் நபி கட்டுப்பாடாக இருந்தாலும் ஒரு சமயத்தில் தடுமாற ஆரம்பித்தார். ஆனாலும் அல்லாஹ்வின் அருளால் உடனடியாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்'' என்று இவ்வசனத்தை மேலோட்டமாகப் பார்த்தால் கூட அறியலாம்.

அதாவது அப்பெண் மீது அவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு உடனே சுதாரித்துக் கொண்டார் என்று நாம் கூறுகிறோம்.

"அவள் அவரை நாடினாள். அல்லாஹ்வின் அத்தாட்சியை அவர் பார்த்திராவிட்டால் அவரும் அவளை நாடியிருப்பார்'' என்று சிலர் பொருள் கொண்டு யூஸுஃப் நபி அப்பெண்ணை நாடவே இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.

யூஸுஃப் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருந்தார்கள். அவர்கள் எப்படி ஒரு பெண் மீது மையல் கொள்ள முடியும் என்ற எண்ணத்தின் காரணமாகவே இவர்கள் அவ்வாறு பொருள் கொள்கின்றனர்.

ஆனால் இவ்வாறு பொருள் கொள்வது அரபு மொழி மரபுக்கும், இலக்கணத்துக்கும் எதிரானது என்று இப்னு கஸீர் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.

அரபு மொழி மரபுப்படி "அவள் அவரை நாடினாள்; அவரும் அவளை நாடினார். அல்லாஹ்வின் அத்தாட்சியை அவர் பார்த்திராவிட்டால் (தவறி யிருப்பார்)'' என்று பொருள் கொள்வது தான் சரியானது. திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டிருப்பதால் வேறு காரணங்கள் கூறி அம்மொழி மரபுக்கு எதிராகப் பொருள் கொள்ள முடியாது.

மேலும் இஸ்லாமிய அடிப்படையில் உள்ளத்தில் சலனம் ஏற்படுவது குற்றமல்ல. சலனத்தை நடைமுறைப்படுத்துவது தான் குற்றமாகும்.

மேலும் தனிமையில் ஒருவரை அழகான பெண் வயப்படுத்தும் போது யாராக இருந்தாலும் சலனம் ஏற்படத் தான் செய்யும். அது போல் யூஸுஃப் நபிக்கும் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு விலகி விடுகிறார்கள். இது இறைத் தூதரின் தகுதியில் எந்தக் குறைவையும் எற்படுத்தாது.

மேலும் இதே அத்தியாயத்தின் 53வது வசனத்தில் "என் உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை'' என்று யூஸுஃப் நபி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. உள்ளத்தின் இது போன்ற சலனங்களிலிருந்து ஆண்மையுடைய யாராலும் தப்பிக்க முடியாது.

எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்பது நபிமொழி. (திர்மிதீ 1091).

எனவே யூஸுஃப் நபியவர்கள் உள்ளத்தில் சலனம் ஏற்பட்டதாகத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறும் போது வேறு விளக்கம் கொடுக்க நியாயமான காரணம் ஏதுமில்லை.

11.07.2009. 02:47




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
52 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி