223. பலியிடப்பட்டவர் இஸ்மாயீல் தான்

223. பலியிடப்பட்டவர் இஸ்மாயீல் தான்

இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன் வந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

இப்ராஹீம் நபியவர்கள் பலியிட முன் வந்தது இஸ்ஹாக்கைத் தான் என்று சிலர் கூறியுள்ளனர். அது தவறு என்பதற்கு இவ்வசனம் (11:71) சான்றாகவுள்ளது.

இஸ்ஹாக் என்ற மகன் பிறக்கப் போவதைக் கூறும் போதே, யஃகூப் என்ற பேரன் பிறக்கப் போவது பற்றியும் முன் கூட்டியே இப்ராஹீம் நபிக்குக் கூறப்பட்டதாக இவ்வசனம் (11:71) கூறுகின்றது.

பேரனைப் பற்றி நற்செய்தி கூறப்பட்டதால் இஸ்ஹாக் சிறு வயதில் மரணிக்க மாட்டார் என்பதும், அவர் மணம் முடித்து யஃகூபைப் பெறுவார் என்பதும் இப்ராஹீம் நபிக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின் இஸ்ஹாக்கைப் பலியிடுமாறு கூறி இப்ராஹீம் நபியைச் சோதிக்க முடியாது. இஸ்ஹாக் இப்போது சாக மாட்டார் என்று இறைவனே கூறிய பிறகு இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனை அறுத்துப் பலியிட முன் வந்ததில் பெரிய தியாகம் ஏதும் இருக்காது.

தன் மகன் சாகவே மாட்டான் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் இதைச் செய்ய முன் வருவர். எனவே இஸ்மாயீலை அறுத்துப் பலியிடுமாறு கூறுவது தான் இருவரையும் சோதித்துப் பார்ப்பதாக அமைய முடியும்.

11.07.2009. 02:28




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
67 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி