218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா?
218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு அதை வேதமுடைய சமுதாயத்தினர் தீர்த்து வைப்பார்கள் என்று திருக்குர்ஆன் 10:94 வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது.
நபிகள் நாயகம் ஆரம்பத்தில் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட போது தமக்கு இறைவனிடமிருந்து தான் செய்தி வந்துள் ளதா? அல்லது தமக்கு வேறு ஏதும் ஏற்பட்டு விட்டதா? என்று சந்தேகம் கொண்டார்கள். (பார்க்க: புகாரி 4)
இறைவன் புறத்திலிருந்து மனிதர்களுக்கு வேதம் அருளப்படுமா? என்ற அடிப்படையான விஷயத்தில் சந்தேகம் கொண்டால் வேதமுடைய சமுதாயத் தினரிடம் கேட்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
அவ்வாறு கேட்டால் இறைவனி டமிருந்து மனிதர்களுக்கு வேதம் அருளப்படும் என்ற அடிப்படையை அவர்கள் உறுதிப்படுத்துவார்கள் என்பது தான் இதன் கருத்து.
குர்ஆனில் கூறப்படும் செய்திகளுக்கு அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
11.07.2009. 02:21
