216. எதிர் எதிராக வீடுகளை அமைத்தல்

216. எதிர் எதிராக வீடுகளை அமைத்தல்

இவ்வசனத்தில் (10:87) "கிப்லா' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இச் சொல்லுக்கு "தொழும் போது நோக்கும் திசை' என்றும் பொருள் உள்ளது. "ஒன்றை ஒன்று எதிர் நோக்குதல்' என்ற பொருளும் உண்டு.

அறிஞர்கள் அனைவரும் முதல் அர்த்தத்தையே கொள்கின்றனர். ஆனால் இது தவறாகும்.

வீடுகளைக் கிப்லாவாக, தொழும் திசையாக ஆக்கிக் கொள்வது பொருளற்றதாக உள்ளது. கிப்லா என்றால் ஒரு சமுதாயம் முன்னோக்கும் ஒரே இலக்கைக் குறிக்கும். ஒவ்வொருவரின் வீடும் கிப்லா என்றால் எதுவுமே கிப்லா இல்லை என்று ஆகிவிடும்.

வீடுகள் கிப்லா என்ற கருத்துப் படி ஒவ்வொருவரும் தமது வீட்டை விட்டு வெளியே வந்து தமது வீட்டை முன்னோக்க வேண்டும்.

ஒரு சமுதாயத்தை ஒரு இலக்கில் நிறுத்தி ஒற்றுமைப்படுத்தும் கிப்லா எந்த இலக்குமில்லாமல் ஒழுங்கு இல்லாமல் சிதறடிக்கும் நிலை இதனால் ஏற்படும். எனவே இச்சொல்லுக்கு எதிர் எதிராக வீடுகளை அமைத்தல் என்ற அகராதிப் பொருளை நாம் கொடுத்துள்ளோம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் தவிர மற்ற சமுதாயத்தினருக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்படவில்லை. வழிபாட்டுத் தலத்தில் மட்டும் தான் அவர்கள் வணங்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டனர் என்று ஏற்கத் தக்க ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: புகாரி 335, 438)

எனவே வீடுகளைக் கிப்லாவாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

வீடுகளை அமைக்கும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல் நடுவில் தெரு அமைத்து வீடுகளை எதிர் எதிராக நோக்கும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறு இறைவன் கட்டளையிட்டான் என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும்.

நாகரீகங்களில் எகிப்திய நாகரீகம் மிகவும் பழமையானது என்பதை வரலாறு கூறுகிறது. அதுவும் இறைவனது வழி காட்டுதலின் படி இறைத் தூதர்களால் கற்றுக் கொடுக்கப்பட்டதே என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

11.07.2009. 02:19




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
93 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி