212. நபிகள் நாயகத்தின் தூய வாழ்க்கை
212. நபிகள் நாயகத்தின் தூய வாழ்க்கை
தாம் இறைத் தூதர் என்பதற்குத் தமது கடந்த கால வாழ்க்கையை முக்கியமான சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் வைக்கிறார்கள்.
இறைத் தூதர் என்று தம்மை அறிமுகப்படுத்துவதற்கு முன் பொய், பித்தலாட்டம், ஒழுக்கக் கேடு, தீய பழக்கங்கள் போன்ற அனைத்தி லிருந்தும் அவர்கள் விடுபட்டு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு இவ்வசனம் (10:16) சான்றாகவுள்ளது.
இறைத் தூதராக ஆன பின்பு அதை விடத் தூய்மையான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
11.07.2009. 02:12
