21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

இறைவனை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கு இஸ்லாம் அளிக்கும் விடை, முடியாது என்பது தான்.

எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்த தில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இறைவனிடம் உரையாடியுள்ளார்களே தவிர அவனைப் பார்த்ததில்லை.

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 261)

இறைவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததில்லை. (நூல்: புகாரி 3234, 4855, 7380)

மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தவர் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மூஸா நபியிடம் கேட்ட போது அவர்களை அல்லாஹ் இடியோசை யினால் தாக்கினான் என்று திருக் குர்ஆனின் 2:55, 4:153 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

மூஸா நபியாலும் இறைவனை நேரில் பார்க்க முடியவில்லை. (பார்க்க திருக்குர்ஆன் 7:143)

அவனைப் பார்வைகள் அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான் என்றும் அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க திருக்குர்ஆன் 6:103)

இவ்வுலகில் இறைவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்குக் கேடு தான் ஏற்படும்; நன்மை ஏற்படாது.

தாம் இறைவனைப் பார்த்ததாக எத்தனையோ ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:46, 2:55, 2:223, 2:249, 3:77, 4:153, 6:31, 6:103, 6:154, 7:143, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 25:21, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15)

10.07.2009. 02:52




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
94 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி