204. உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு ஸகாத்
204. உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு ஸகாத்
ஸகாத் நிதியைப் பெறத் தகுதியானவர்களில் முஸ்லிமல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்லிம் அல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் உளமாற அன்பு செலுத்துகிறார்களோ அத்தகையோருக்கும் ஸகாத் நிதியைச் செலவிடலாம். (திருக்குர்ஆன் 9:60)
உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காக என்பது இத்தகையோரையே குறிக்கிறது. பகைமை பாராட்டும் முஸ்லிமல்லா தவர்கள் பகைமையைக் கைவிடுவார்கள் என்றால் அத்தகையோருக்கும் கொடுக் கலாம். "உள்ளங்கள் ஈர்க்கப்பட' என்பதில் இவர்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழங்கி உள்ளனர். (நூல்: முஸ்லிம் 4275, 4277)
இஸ்லாத்தின் வணக்க வழிபாட்டில் ஒன்றாக ஸகாத் அமைந்துள்ளது. அப்படி இருந்தும் ஸகாத்தை முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அளிக்கலாம் என்று கூறியிருக்கிறது. இதற்கு நிகரான ஒரு மனித நேயத்தை உலகில் எந்த மதத்திலும் காண முடியாது.
11.07.2009. 02:01
