195. போர் வெற்றிப் பொருளில் ஏழைகளுக்கு

195. போர் வெற்றிப் பொருளில் ஏழைகளுக்கும் பங்குண்டு

போர்க் களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்களை மொத்தம் ஐந்து பங்குகளாகப் பிரித்து நான்கு பாகங்கள் போரில் பங்கெடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மீதி ஒரு பாகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். (திருக்குர்ஆன் 8:41)

அதாவது போரில் பங்கெடுத்தவர்களுக்கு எண்பது சதவிகிதமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினருக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், நாடோடிகளுக்கும் சேர்த்து இருபது சதவிகிதமும் என்று பிரிக்கப்பட வேண்டும்.

இதில் அல்லாஹ்வையும் குறிப்பிட்டி ருப்பதால் அவனுக்கு ஒரு பங்கு என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வுக்கு உரியது என்று கூறப்படும் பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்கும், தேவையுள்ளோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் ஸகாத் நிதியிலிருந்து எதையும் தொடக் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளதால், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து அவர்களுக்கும் அல்லாஹ் பங்கு ஒதுக்கினான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

11.07.2009. 01:48




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
110 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி