194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் ப

 194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள்

"அவர்களின் உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால்'' என்று கூறப்படுவதால் (8:23, 8:70) அல்லாஹ் அறியாமலும் இருப்பானா என்று கருதக் கூடாது.

ஏனெனில் அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும் போது, அனைத்தையும் அறிந்தவன் எனவும், தனக்குத் தெரியாதது எதுவுமே இல்லை எனவும் பல்வேறு வசனங்களில் குறிப்பிடுகிறான்.

எனவே, அவர்களின் உள்ளத்தில் நன்மை இருப்பதையோ, அல்லது இல்லாததையோ நிச்சயமாக அவன் அறிவான். இந்த இறைப் பண்புக்கு மாற்றமில்லாத வகையில் தான் இவ்விரு வசனங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களது உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதற்கு, "அவர்களின் உள்ளங்களில் நன்மை இருந்திருந்தால்' என்பதே பொருள்.

அவர்கள் உள்ளங்களில் நன்மை இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுக்குத் தெரியும்.

அவர்களின் உள்ளங்களில் நன்மை இருப்பதாக அல்லாஹ்வுக்குத் தெரியவில்லை என்று கூறினால், அவர்களிடம் நன்மை இல்லை என்பதே பொருள். அதாவது, அவர்களிடம் சிறிதளவாவது நன்மை இருந்திருந்தால் இந்தச் சத்தியக் கருத்தை ஏற்றிருப்பார்கள் என்பதையே இவ்வசனம் கூறுகிறது.

11.07.2009. 01:40




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
108 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி