192. உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல்

 192. உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல்

இறைவனின் பெயரை நினைவு கூரலும் இஸ்லாத்தில் ஒரு வணக்கமாக உள்ளது. தொழுகை நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்தை நாம் செய்வதாக இருந்தாலும் நமது இஷ்டத்துக்கு அவற்றைச் செய்ய முடியாது. அவ்வணக்கத்தின் ஒவ்வொரு விதி முறைகளும் அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்தபடி அமைய வேண்டும்.

கிப்லாவை நோக்கித் தொழுவதற்குப் பதிலாக வேறு திசை நோக்கித் தொழுதால் அது தொழுகையாகாது. இறைவனின் மார்க்கத்தைக் கேலிக்குரியதாக ஆக்கிய குற்றம் தான் இதனால் ஏற்படும்.

அது போல் தான் இறைவனின் திருப்பெயர்களையும், இறைவனின் புகழ்பாட நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்த சொற்களையும் தியானம் செய்ய விரும்பினால் அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்த அடிப்படையில் தான் செய்ய வேண்டும்.

இறைவனை எவ்வாறு நினைவு கூர வேண்டும் என்ற ஒழுங்கு இங்கே (7:205) கூறப்படுகிறது. முதலில் பணிவுடனும், அச்சத்துடனும் இறைவனை நினைவு கூர வேண்டும். இரண்டாவது, நாவால் மட்டும் இறைவனின் பெயரைக் கூறாமல் உள்ளத்திலும் நினைவு கூர வேண்டும். மூன்றாவதாக, உரத்த சப்தமின்றி நினைவு கூர வேண்டும்.

இன்றைக்குத் தமிழக முஸ்லிம்களில் பலர் "ராத்திபு' என்ற பெயரிலும், "ஹல்கா' என்ற பெயரிலும் பெரும் கூச்சலுடனும், ஆட்டம் பாட்டத்துடனும் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக நினைத்துக் கொண்டு பாவத்தைச் சுமந்து வருகின்றனர்.

அவர்கள் நன்மை என்ற பெயரில் பாவங்களைச் சுமக்கிறார்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இது பற்றி மேலும் விபரங்கள் அறிய 180, 190 ஆகிய குறிப்புக்களைக் காண்க!

11.07.2009. 01:37




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
103 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி