191. ஆதம் நபி இணை கற்பித்தாரா?

 191. ஆதம் நபி இணை கற்பித்தாரா?

ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் மனைவியும் அல்லாஹ் வுக்கு இணை கற்பித்தார்கள் என்று பலரும் இந்த வசனங்களை (7:189,190) புரிந்து கொள்கின்றனர்.

இவ்வசனங்களின் துவக்கத்தில் முதல் மனிதரைப் பற்றிக் கூறப்படுவதால், "இணை கற்பித்தார்கள்' என்ற சொற்றொடர் ஆதமைத் தான் குறிக்கும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் ஆதம் (அலை) அவர்கள் இறைத் தூதர் என்பதையும், இறைத் தூதர்கள் இணை கற்பிக்க மாட்டார்கள் என்பதையும் இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் முதல் மனிதரைப் பற்றிப் பேசத் துவங்கும் இவ்வசனம் பொதுவாக மனிதர்களைக் குறிக்கும் வகையில் பன்மையாக மாறுவதையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

பொதுவாக மனிதன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்றே இவ்வசனங்களை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வசனங்களை அடுத்து "நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே'' எனக் கூறப்படுகிறது. இது நிச்சயம் ஆதம் (அலை) அவர்களைக் குறிக்க முடியாது. ஏனெனில் அவர்களுக்கு முன் எந்த அடி யாரும் வாழ்ந்து மறைந்திருக்கவில்லை.

எனவே எந்த அடியாரையும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கி இருக்க மாட்டார்கள். தொடர்ந்து வரும் வசனங்களையும் சேர்த்து இவ்விரு வசனங்களைக் கவனித்தால் பொதுவாக மனிதனின் போக்கு பற்றியே கூறப்படுவதை அறிந்து கொள்ளலாம்.

11.07.2009. 01:36




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
102 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி