190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்

 190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்

அல்லாஹ்வுக்கு அழகான பெயர்கள் உள்ளன என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் இவ்வசனங்கள் (7:180, 17:110) கூறுகின்றன. அல்லாஹ்வின் பெயரைத் திரித்துக் கூறுவதும் சிதைப்பதும் கடும் குற்றம் எனவும், அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கடுமையாக எச்சரிக்கின்றன.

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பலர் "தியானம்' என்ற பெயரில் அல்லாஹ்வின் பெயரை சர்வ சாதாரணமாகச் சிதைத்து, நரகத்திற்குத் தாங்களாகவே தயாராகி வருவதைக் காண முடிகிறது.

ராத்திபு, திக்ரு என்ற பெயரில் "ஹு ஹு' என்று அல்லாஹ்வை தியானம் செய்கின்றனர். இது அல்லாஹ்வின் பெயர்களில் உள்ளது அல்ல. "ஹு' என்றால் அவன் என்பது பொருள். ஷைத்தானைக் கூட "ஹு' என்று கூறலாம்.

எந்த ஒரு தன்மையையும் குறிக்காத, அல்லாஹ்வின் பெயராக இல்லாததை, அல்லாஹ்வை திக்ரு செய்ய இவர்கள் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு இவ்வசனம் கடும் எச்சரிக்கையாக உள்ளது.

"ஹக் தூ ஹக்' என்று அரபியும், உருதும் கலந்த புதுப் பெயரைக் கண்டு பிடித்து, அதையும் திக்ரு என்ற பெயரில் உச்சரிக்கின்றனர். புனித ரமளான் மாதத்தில் பள்ளிவாசல்களிலும் "ராத்திபு' என்ற பெயரில் அல்லாஹ்வுக்குக் கோபம் ஏற்படுத்தும் இந்தச் செயல் அரங்கேற்றப்படுவதைக் காண்கிறோம்.

அல்லாஹ் என்பதில் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் மட்டும் வெட்டி எடுத்து "அஹ்' என்று புதுச் சொல்லை உண்டாக்கி அல்லாஹ்வை திக்ரு செய்கின்றனர்.

இப்ராஹீம் என்பது இவர்களின் பெயர் என்றால் "இம்' என்று சுருக்குவதில் சந்தோஷம் அடைவார்களா? அல்லாஹ்வின் பெயரைத் திரிக்க இவர்கள் யார்? இதையெல்லாம் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு செய்பவர்கள் தோன்றுவார்கள் என்பதை அறிந்த அல்லாஹ் முன் கூட்டியே இவர்களைப் பற்றி எச்சரித்து விட்டான். நன்மையை அடைவதாக நினைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் இக்காரியம் இவர்களை நரகத்தில் சேர்க்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என இவ்வசனத்திலிருந்து உணரலாம்.

இது பற்றி மேலும் விபரங்கள் அறிய 180, 192 ஆகிய குறிப்புகளைக் காண்க!

11.07.2009. 01:34




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
99 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி