19. காளைக் கன்றை வணங்கிய இஸ்ரவேலர்

19. காளைக் கன்றை வணங்கிய இஸ்ரவேலர்

இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக "தூர்' மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்டார். தூர் மலை நோக்கி மூஸா நபி புறப்பட்டவுடன் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஸாமிரி என்பவன் அவர்களது நகைகளைப் பெற்று உருக்கி காளைக் கன்றின் சிற்பத்தை உருவாக்கினான்.

மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. "இது தான் கடவுள்; மூஸா வழி மாறிச் சென்று விட்டார்'' எனக் கூறி அம்மக்களை ஸாமிரி நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான். (பார்க்க திருக்குர்ஆன் 20:96)

அதிலிருந்து ஒரு சப்தம் வந்ததே கடவுள் என்று நம்புவதற்கு அவர்களுக்குப் போதிய சான்றாகத் தெரிந்தது. அது பேசாது என்பதோ, இவர்களின் பேச்சுக்கு எந்த மறுமொழியும் கூறாது என்பதோ அவர்களுக்குப் புரியவில்லை. மூஸா நபி அவர்கள் அதைத் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலைக் கடலில் தூவி, இது கடவுள் அல்ல என நிரூபித்துக் காட்டினார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 20:89, 20:97)

நமது அறிவுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றை நம்மிடம் ஒருவர் செய்து காட்டி நம்மை ஏமாற்ற முயலலாம். அது போன்ற நேரங்களில் அதை மட்டும் அடிப்படையாக வைத்து அவருக்கு அனைத்தும் இயலும் என்று நாம் நம்பி விடக் கூடாது. இதில் ஏதோ தந்திரம் உள்ளது எனப் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற ஒன்றிரண்டு செயல்களைச் செய்பவர் மற்ற அனைத்து விஷயங்களிலும் நம்மைப் போலவே மனிதராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உண்ணுகிறார்; பருகுகிறார்; மல ஜலம் கழிக்கிறார்; நோய் வாய்ப்படுகிறார்; முதுமையடைகிறார் என்பன போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு அவரது பலவீனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 20:97 வசனத்திலிருந்து இந்தப் பாடத்தைப் புரிந்து கொள்ளலாம்.

(பார்க்க: திருக்குர்ஆன் 2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98)

10.07.2009. 02:48




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
95 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி