186. தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகா

 186. தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம்

ஒன்றை அனுமதிக்கவும், தடுக்கவும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உண்டு. அல்லாஹ் அனுமதித்ததைத் தடை செய்யவோ, அல்லாஹ் தடை செய்ததை அனுமதிக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

5:87, 6:138,139, 6:150, 7:32, 10:59, 16:116 ஆகிய வசனங்களில் ஹலால்களை ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆயினும் திருக்குர்ஆன் 7:157, 9:29 ஆகிய வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இறைவன் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளதாகக் கூறுகிறான்.

இதை மேற்கண்ட வசனங்களுக்கு முரணாகக் கருதக் கூடாது.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் எனும் செய்தி ஜிப்ரீல் (அலை) மூலம் கிடைத்தது போல் மற்றொரு வகையான செய்தியும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்தது.

அந்தச் செய்தியின் அடிப்படை யிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹலால் என்றோ, ஹராம் என்றோ அறிவிப்பார்கள் என்பதால் அதுவும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்தது தான்.

"அல்லாஹ் அனுமதித்ததை நீர் எப்படி ஹராமாக்கலாம்?' என்று 66:1 வசனம் கூறுவதையும் இதற்கு எதிராகக் கருதக் கூடாது. 66:1 வசனத்தில் கூறப்படும் ஹராம் என்பது மக்களுக்குத் தடை செய்தது பற்றிக் கூறவில்லை. மாறாக, அனுமதிக்கப்பட்ட ஒன்றை தம் அளவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர்த்துக் கொள்வதைத் தான் கூறுகிறது.

அனுமதிக்கப்பட்ட ஒரு பொருள் ஒருவருக்குப் பிடிக்காவிட்டால் தவிர்த் துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அது பிடித்திருந்தும், வேறு காரணங்களுக்காக இதைத் தொட மாட்டேன் என்று சபதம் செய்தார்கள். இதையே 66:1 வசனம் தடுக்கிறது. "உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் இவ்வாறு செய்கிறீர்?'' என்ற கேள்வியிலிருந்து இதை அறியலாம்.

மேலும் விளக்கத்துக்கு 42, 272 ஆகிய குறிப்புகளைக் காண்க!

11.07.2009. 01:28




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
97 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி