181. ஒடுக்கப்பட்டோருக்காகப் பாடுபடுதல
181. ஒடுக்கப்பட்டோருக்காகப் பாடுபடுதல்
மூஸா நபியவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்துடன் மற்றொரு பணிக்காகவும் அனுப்பப்பட்டார்கள்.
அன்றைய ஆளும் வர்க்கமான ஃபிர்அவ்னின் இனத்தவர், இஸ்ரவேல் சமுதாயத்தின் மீது அடக்குமுறை புரிந்தனர். அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தினர்.
மூஸா நபியவர்கள், ஃபிர்அவ்னுக்கு ஏகத்துவத்தைச் சொன்னதோடு இஸ்ர வேல் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார்கள். "அவர்களை என்னோடு அனுப்பி விடு! அவர்களைக் கொடுமைப்படுத்தாதே'' என்றெல்லாம் அவனிடம் கோரிக்கை எழுப்பினார்கள். 7:105, 7:134, 20:47, 26:17, 26:22, 44:18 ஆகிய வசனங்களில் இதைக் காணலாம்.
முஸ்லிமல்லாத ஆட்சியாளரிடம் உரிமையைக் கேட்பதும், ஒடுக்கப்பட்ட இனத்துக்காகக் குரல் எழுப்புவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக உள்ளன.
11.07.2009. 01:21
