179. உலகம் படைக்கப்பட்ட நாட்கள்

179. உலகம் படைக்கப்பட்ட நாட்கள்

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக 7:54, 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

இதன் பொருள் வானங்கள், பூமி மட்டும் அல்ல. வானங்களுக்கும் பூமிக்கும் இடைப்பட்டவைகளையும் சேர்த்தே அல்லாஹ் கூறுகிறான்.

25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்களில் வானங்களையும், பூமியையும் என்ப துடன் இடைப்பட்டவைகளையும் சேர்த்து ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.

பூமியைப் படைக்க இரண்டு நாட்கள் (திருக்குர்ஆன் 41:9), வானங்களைப் படைக்க இரண்டு நாட்கள் (திருக் குர்ஆன் 41:12), என்று கூறப்படுவதை இதற்கு முரணானது என்று கருதக் கூடாது.

பூமியைப் படைத்து அதில் மலைகளை நிறுவியது, உணவுகளை அதில் நிர்ணயித்தது ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள் என்று 41:10 வசனம் கூறுகிறது.

பூமியைப் படைக்க இரு நாட்கள், அதில் மனிதன் வாழத் தேவையான ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள், வானங்களைப் படைக்க இரு நாட்கள் என ஆறு நாட்களில் அனைத்தையும் அல்லாஹ் படைத்தான்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 7:54, 10:3, 11:7, 41:9,10, 41:12, 25:59, 32:4, 50:38, 57:4)

11.07.2009. 01:13




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
93 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி