177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திற

177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது?

இவ்வசனத்தில் (7:40) வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பல விதமான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. வானத்தில் தான் சொர்க்கம் உள்ளது. எனவே தீயவர்கள் அங்கே போக மாட்டார்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்களின் விளக்கம் நிராகரிக்கத்தக்கது.

ஏனெனில் சொர்க்கம் மட்டுமின்றி நரகமும் சொர்க்கத்தின் அருகில் தான் உள்ளது. இரண்டுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் தான் இருக்கும். இதனாலேயே தடுப்புச் சுவர் என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது. இவர்கள் வாதப்படி சொர்க்கத்துக்கு மட்டுமின்றி நரகத்திற்கும் செல்ல மாட்டார்கள் என்ற கருத்து வந்து விடும்.

வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்.

"மனிதர்கள் மரணித்தவுடன் அவர்களின் உயிர்களை வானவர்கள் வானுலகிற்கு எடுத்துச் செல்கின்றனர். நல்லவர்களின் உயிர்கள் மிகுந்த நறுமணத்துடன் திகழும். ஒவ்வொரு வானிலும் வானவர்கள் அதனை வரவேற்பார்கள். "எனது இந்த அடியானின் பெயரை இல்லிய்யீனில் பதிவு செய்யுங்கள்; பூமிக்கே இவரை எடுத்துச் செல்லுங்கள். அங்கே தான் இவர்களை நான் படைத்தேன்........' என்று இறைவன் கூறுவான். அந்த உயிர் அதற்குரிய உடலுக்குள் செலுத்தப்பட்டு, மண்ணறை விசாரணை நடைபெறும். கெட்டவனின் உயிர் துர்நாற்றம் உடையதாக இருக்கும். வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது அந்த உயிருக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி விட்டு, இவ்வசனத்தை (7:40) ஓதிக் காட்டினார்கள். "இவனது பெயரை பூமியின் ஆழத்தில் உள்ள ஸிஜ்ஜீனில் பதிவு செய்யுங்கள்' என்று இறைவன் கூறுவான். அவனது உடலுக்குள் அந்த உயிர் செலுத்தப்பட்டு மண்ணறை விசாரணை நடைபெறும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பார்க்க: புகாரி 336, 3094)

 மேலும் விபரத்திற்கு 434வது குறிப்பைக் காண்க!

11.07.2009. 01:11




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
93 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி