176. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்பு

176. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்பு

வழிபாடு நடத்தும் போது சில மதத்தவர்கள் ஆடைக் குறைப்பு செய்கின்றனர். குறிப்பிட்ட ஆலயங்களில் நுழைய, நாட்டின் அதிபரே ஆனாலும் மேலாடைகளைக்களைந்து விட்டுத் தான் செல்ல வேண்டும் எனக் கூறப்படுகிறது.

கடவுளுக்குப் பூஜை நடத்துபவர் மேலாடை இல்லாமல் தான் பூஜை நடத்துகிறார். இன்னும் சிலர் நிர்வாணமாகத் தான் வழிபாடு நடத்த வேண்டும் எனக் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் இந்த நம்பிக்கைகளை ஒப்புக் கொள்ளவில்லை. நல்ல ஆடை அணிந்து பள்ளிவாசலுக்கு வர வேண்டும் என்பதை இவ்வசனம் (7:31) வலியுறுத்துகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நல்ல ஆடை அணிந்து வருவோர் பள்ளி வாசலுக்கு வரும் போது அழுக்காடைகளுடன் வருகின்றனர். இது தவறாகும்.

நம்மிடம் எது இருக்கிறதோ, அதில் சிறந்த ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு வர வேண்டும். தினமும் ஐந்து வேளை நல்ல முறையில் ஆடை அணிந்து பழகுபவன் முழு வாழ்க்கை யிலும் சிறந்த ஆடை அணிந்து மற்றவருக்கு முன்மாதிரியாகத் திகழ்வான் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

சில பள்ளிவாசல்களில் விரிக்கப்பட்டுள்ள பாய்களில் அமர்ந்தால் அணிந்திருக்கும் ஆடைகளே அசுத்த மாகும் அளவிற்கு உள்ளன.

பள்ளிவாசல் நாற்றமின்றி நறுமணத்துடனும், ஆடம்பரமின்றி அழகுடனும், தூய்மையுடனும் திகழ வேண்டும். இது பள்ளிவாசல் நிர்வாகத்தின் மீது சுமத்தப்பட்ட கடமை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

11.07.2009. 01:10




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
91 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி