170. பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்

170. பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்

பிற மதக் கடவுள்களைத் திட்டக் கூடாது என்று இவ்வசனம் (6:108) கூறுகின்றது.

அகில உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையில் முழு அளவுக்கு இஸ்லாம் உறுதியாக நிற்கின்றது.

அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அனைத்தும் கற்பனைகளே தவிர கடவுள்கள் அல்ல எனவும் இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.

ஆனாலும் முஸ்லிமல்லாதவர்கள் தெய்வமாக நம்புவோரைப் பற்றி தரக் குறைவாக விமர்சிப்பதோ, ஏசுவதோ கூடாது என்று திட்டவட்டமாக இஸ்லாம் அறிவிக்கிறது.

முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவு தான் வம்புக்கு இழுத்தாலும் அவர்கள் புனிதமாகக் கருதுவோரை எக்காரணம் கொண்டும் ஏசக் கூடாது எனக் கூறி பல்சமய மக்களிடையே நல்லிணக் கத்துக்கு வழி வகுக்கிறது.

அதே சமயத்தில் அல்லாஹ் மட்டும் தான் கடவுளாக இருக்க முடியும்; பல கடவுள்கள் இருக்க முடியாது என்று அறிவுப்பூர்வமாக விமர்சிப்பது பிற மத தெய்வங்களைக் குறை கூறியதாக ஆகாது. (பார்க்க: திருக்குர்ஆன் 3:64, 3:79, 4:171, 5:72, 5:73, 6:71, 6:100, 6:108, 9:31, 12:39, 12:40, 13:16, 16:51, 17:22, 17:111, 21:22, 21:24, 23:91, 23:117)

11.07.2009. 01:01




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
91 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி