166. இறந்தவுடனே வேதனை ஆரம்பம்

166. இறந்தவுடனே வேதனை ஆரம்பம்

கப்ரு எனும் ஆன்மாக்களின் உலகத்தில் தீயவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள்; நல்லவர்கள் இன்பம் அனுபவிக்கிறார்கள் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகள் இருக்கின்றன. முஸ்லிம்களும் அவற்றை நம்புகின்றார்கள்.

ஆனால் திருக்குர்ஆனில் கப்ரு என்னும் மண்ணறை வாழ்க்கை பற்றியோ, அங்கே வேதனை இருக்கிறது பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை என்று காரணம் காட்டி சிலர் அதனை மறுக்கிறார்கள்.

கப்ரில் வேதனை இருக்கிறது என்று திருக்குர்ஆனில் நேரடியாகக் கூறப் படாவிட்டாலும் அந்தக் கருத்தைத் தருகின்ற வசனங்கள் குர்ஆனில் காணப்படுகின்றன. அத்தகைய வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த வசனத்தில் (6:93) வானவர்கள் அநியாயக்காரர்களின் உயிரைக் கைப்பற்றுகின்ற போது "இன்று நீங்கள் இழிவு தரும் வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

என்றைக்கு கைப்பற்றப்படுகின்றார் களோ அன்றிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் அழிக்கப்பட்டு, நியாயத் தீர்ப்பு நாள் வந்து விசாரிக்கப்பட்டு, அதன் பிறகு தான் அவர்களுக்கு நரகம் என்ற இழிவு தருகின்ற தண்டனை கிடைக்கப் போகிறது.

ஆனால் இவ்வசனமோ உயிர்களைக் கைப்பற்றும் போது "இன்று வேதனையை அனுபவியுங்கள்' என்று வானவர்கள் கூறுவதாகத் தெரிவிக்கிறது. அதாவது உயிரைக் கைப்பற்றும் போதே வேதனை துவங்கி விடுகிறது.

இதற்கு விளக்கமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு வேதனை இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். இது குர்ஆனுக்கு மாற்றமானது இல்லை.

அதிக விளக்கத்திற்கு இதே பகுதியில் 332, 349 ஆகிய குறிப்புகளைக் காண்க!

11.07.2009. 00:55




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
95 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி