156. நபிக்கு இரு மடங்கு வேதனையா?

 156. நபிக்கு இரு மடங்கு வேதனையா?

இவ்வசனத்தில் (17:75), நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீய வழி செல்வோருக்குச் சார்பாக இருந்திருந்தால் அவர்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் இரு மடங்கு வேதனையை சுவைக்கச் செய்தி ருப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிக் கட்டத்தில் நோய் வாய்ப்பட்ட போது தாம் இரு மடங்கு துன்பத்தை அனுபவிப்பதாகக் குறிப் பிட்டனர். (புகாரி 5648, 5660, 5667)

இது திருக்குர்ஆனுக்கு எதிரானது என்று சிலர் கருதுகின்றனர்.

தண்டிக்கும் முகமாக இரு மடங்கு வேதனை தருவதையே அல்லாஹ் இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான். சோதிப் பதற்காகவும், மறுமையில் மகத்தான பரிசை வழங்குவதற்காகவும் இவ்வுலகில் நல்லவர்களுக்குப் பல மடங்கு வேதனை தருவது இவ்வசனத்திற்கு எதிரானது அல்ல. அய்யூப் நபி உள்ளிட்ட பல நபிமார்கள் இரு மடங்கு அல்ல, பல மடங்கு வேதனைகளை இவ்வுலகில் அனுபவித்ததற்குக் குர்ஆனில் சான்று உள்ளது.

மேலும், இவ்வசனத்தில் இவ்வுலகிலும், மறுமையிலும் என்று இறைவன் குறிப்பிடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் மட்டுமே இரு மடங்கு துன்பத்தை அனுபவித்தார்கள். மறுமையில் அவர்களுக்கு இத்தகைய துன்பம் அளிக்கப்பட மாட்டாது. எனவே, இரு உலகிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு மடங்கு துன்பத்தை அனுபவித்தார்கள் என்று கூறினால் தான் அந்த ஹதீஸ்கள் இவ்வசனத்திற்கு எதிராக அமையும்.

11.07.2009. 00:21




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
91 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி