155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தை

 155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்

திருக்குர்ஆன் 18:109, 31:27 ஆகிய வசனங்களில் "அல்லாஹ்வின் வார்த்தைகளை எழுத கடல் நீர் அளவுக்கு "மை' இருந்தாலும், அது போல் இன்னும் ஏழு கடல்கள் அளவுக்கு மை இருந்தாலும் போதாது'' எனக் கூறப்படுகிறது. இவ்வசனங்களைச் சிலர் தவறாக விளங்கிக் கொள்கின்றனர். அதாவது, திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிட கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும் எழுதி முடியாது என்பது அவர்களின் விளக்கம்.

இவ்விளக்கம் முற்றிலும் தவறாகும். திருமறைக் குர்ஆனை மக்கள் விளங்கு வதற்கு எளிதாக இறைவன் ஆக்கியிருக்கிறான். கடல் நீர் அளவுக்கு உள்ள மைகளால் எழுதுமளவுக்கு குர்ஆனை இறைவன் கடினமானதாக வழங்கவில்லை.

ஒவ்வொரு விநாடி நேரத்திலும் இறைவனிடமிருந்து புறப்படுகின்ற கோடிக்கணக்கான கட்டளைகளே இங்கே இறைவனின் வார்த்தைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.

ஒரு விநாடி நேரத்தில் ஒரே ஒரு மனிதனுக்கு இடப்படுகின்ற கட்டளை களே பல்லாயிரக் கணக்கில் உள்ளன. அவனுடைய ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கம், உடலிலுள்ள ஒவ்வொரு செல்களின் இயக்கம், உள்ளுறுப்புகளின் இயக்கம் என கோடிக் கணக்கான இயக்கங்கள் ஒரு மனிதனிடம் ஒரு விநாடி நேரத்தில் நடக்கின்றன. இதற்கான கட்டளைகள் யாவும் இறைவனிடமிருந்து தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளன.

ஒரு மனிதனின் ஒரு விநாடி நேரத்திற்குள் அவனுக்கு பல்லாயிரக் கணக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என்றால் அகிலத்தில் நடைபெறுகின்ற கோடானு கோடி நிகழ்வுகளுக்கு இறைவன் பிறப்பிக்கின்ற கட்டளைகளை எழுதுவதாக இருந்தால் உண்மை யிலேயே ஏழு கடல்கள் மையாக இருந்தாலும் போதாது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இறைவனின் வார்த்தைகள் என்பது இது போன்ற கட்டளைகளையே குறிக்கும் என்பதற்குத் திருக்குர்ஆனின் 6:115, 8:7, 10:64, 10:82, 42:24, 66:12 ஆகிய வசனங்களைச் சான்றாகக் கொள்ளலாம். இவ்வசனங்களிலும் இறைவனின் வார்த்தைகள் என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இங்கே இறைவனின் வார்த்தைகள் என்பதற்கு, திருக்குர்ஆன் என்று கருத்துக் கொள்ள இயலாது.

11.07.2009. 00:19




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
89 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி