150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்க

150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?

மார்க்க அறிஞர்களிடம் எந்த எதிர்க் கேள்வியும் கேட்கக் கூடாது என்று கூறுவோர் இவ்வசனத்தை (5:101) தமக்குச் சான்றாகக் காட்டுவார்கள்.

 ஆனால் இவ்வசனம் இறைத் தூதரிடம் இறைச் செய்தி அருளப்படும் போது கேள்வி கேட்கக் கூடாது என்று தான் கூறுகிறது. ஏன் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கான காரணமும் கூறப்படுகிறது.

என் தந்தை யார் என்று கூட சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். (நூல் புகாரி 4621, 4622)

இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டால், இவர் யாரைத் தந்தை என நினைக்கிறாரோ அவர் அல்லாதவர் தந்தையாக இருந்து விட்டால் தேவையற்ற மனச் சங்கடத்தை அவர் சந்திப்பார்.

எனவே தான் இறைத் தூதரிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.

பொதுவாக அறிஞர்களிடம் கேள்வி கேட்பதை திருக்குர்ஆன் அதிக அளவில் ஊக்குவிக்கிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 16:43, 21:7)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதை கீழ்க்காணும் வசனங்களில் காணலாம்.

(திருக்குர்ஆன் 2:189, 2:215, 2:217, 2:219, 2:220, 2:222, 5:4, 8:1, 17:85, 18:83, 20:105, 33:63, 51:12, 70:1)

அதிக விளக்கத்திற்கு இதே பகுதியில் 31வது குறிப்பைக் காண்க!

10.07.2009. 12:35




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
91 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி