142. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்

142. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை இறைவனிடமிருந்து தமக்கு வரும் செய்தி என்று அறிமுகப்படுத்திய போது அதன் உயர்ந்த தரத்தையும், நபிகள் நாயகத்தின் படிப்பறிவற்ற தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்த அவர்களது எதிரிகள், "இது முஹம்மதுவின் கூற்றாக இருக்கவே முடியாது. இவ்வளவு உயர்ந்த தரத்தில் இவரால் இதனை உருவாக்கியிருக்க முடியாது'' என்று உறுதியான முடிவுக்கு வந்தனர்.

எனவே குர்ஆனைக் குறை கூறவோ, அதன் தரத்தை விமர்சிக்கவோ வழியில்லாத நிலையில் "முஹம்மதுக்கு ஒரு மனிதர் இக்குர்ஆனை இரகசியமாகக் கற்றுத் தருகிறார்'' என்று தான் குர்ஆனைப் பற்றி அவர்களால் விமர்சிக்க முடிந்தது.

அவர்களின் இந்த விமர்சனமே திருக்குர்ஆன் எவ்வளவு உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கிறது என்ப தற்கு வலுவான சான்று.

இந்த விமர்சனத்திற்குத் தான் இவ்வசனம் (16:103) மறுப்புக் கூறுகிறது. எந்த மனிதர் நபிகள் நாயகத்துக்கு இரகசியமாகக் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறார் என்று கூறினார்களோ அந்த மனிதரின் தாய் மொழி அரபியல்ல. அவர் வேற்று மொழியைச் சேர்ந்தவ ராவார். வேற்று மொழியைச் சேர்ந்த ஒருவர் அரபு மொழியில் மிக உயர்ந்த தரத்தில் எவ்வாறு இதைத் தயாரித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி அவர்களின் அறியாமையைத் திருக் குர்ஆன் அம்பலப்படுத்தியது.

16:103 வசனத்தில் மட்டுமின்றி 25:5 வசனத்திலும் இது போன்ற விமர்சனத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

10.07.2009. 12:23




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
83 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி