140. தூதர் அருள் புரிய முடியுமா?

140. தூதர் அருள் புரிய முடியுமா?

இவ்வசனங்களில் (9:59, 9:74) அல்லாஹ்வும், அவனது தூதரும் அவனது அருளை வழங்குவார்கள் என்று கூறப்படுவதைச் சிலர் தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மக்களுக்குச் செல்வத்தை வழங்குவதற் கான அதிகாரம் படைத்தவர்கள் எனவும், அல்லாஹ் வழங்குவதைப் போலவே நபியவர்களும் வழங்குவார்கள் எனவும் நினைக்கின்றனர். இது தவறாகும்.

ஏனெனில் திருக்குர்ஆனின் பல் வேறு வசனங்களில் தான் நாடியோருக்கு செல்வத்தை வழங்குவதாக அல்லாஹ் கூறுகிறான்.

(பார்க்க: திருக்குர்ஆன் 2:245, 13:26, 16:71, 17:30, 28:82, 29:17, 29:62, 30:37, 34:36, 34:39, 39:52, 42:12)

மேலும் அல்லாஹ்வின் கருவூ லங்கள் என்னிடம் இல்லை என்று பிரகடனம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளை பிறப்பித்ததாகத் குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 6:50)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையே செல்வந்தராக்கிட இயலவில்லை. தமது தோழர்கள் பலர் வறுமையில் உழன்ற போதும் அவர்களைச் செல்வந்தர்களாக்கிட இயலவில்லை.

எனவே, அவ்வசனங்களுக்கு முரண் இல்லாத வகையில் தான் இவ்வசனங்களை (9:59, 9:74) விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதராக மட்டுமின்றி இஸ்லாமிய அரசின் அதிபராகவும் இருந்தார்கள். அதிபர் என்ற முறையில் அரசின் கரு வூலத்தில் இருந்து இல்லாதவர்களுக்கு வழங்கும் கடமை அவர்களுக்கு இருந்தது. அதைத் தான் இவ்வசனம் குறிப்பிடுகிறது.

இன்றைக்கும் கூட ஆட்சி அதிகாரத் தில் உள்ளவர்கள் ஏழைகளுக்குத் தாராள மாக வாரி வழங்கினால் "ஏழைகளைத் தன்னிறைவு அடையச் செய்யும் அளவுக்கு வழங்குகிறார்'' என்று கூறலாம்.

யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தப்படும் சாதாரண அர்த்தத்தில் அமைந்த இச்சொல்லுக்கு தேவையில்லாத வியாக்கியானம் கொடுக்கக் கூடாது.

10.07.2009. 12:21




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
80 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி