118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னற

118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்த போது இவ்வசனம் (73:20) அருளப்படுகிறது.

பாதி இரவோ, மூன்றில் ஒரு பகுதி இரவோ தொழுதால் போதும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இப்படிக் கூறும் போது "உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் இனிமேல் உருவாவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான்'' எனக் கூறுகிறான்.

நோயாளிகள் உருவாவதை யாரும் சொல்லி விட முடியும். முஸ்லிம்களாக வாழ்வதே சிரமமாக இருக்கும் நிலையில் இந்தச் சமுதாயத்தில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்கள் உருவாவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்றால் ஒரு ஆட்சியை அமைத்து படை திரட்டிக் கொண்டு போர் புரிவதைக் குறிக்கும்.

இப்படி போர் புரியக் கூடியவர்கள் உருவாவார்கள் என்பதை அன்றைய சூழ்நிலையில் கணிக்கவே முடியாது. ஆனாலும் இறைவன் கூறியவாறு மிகச் சில வருடங்களிலேயே அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் உருவானார்கள்.

இவ்வாறு முன்னறிவிப்புச் செய்திருப்பது, திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்குரிய மற்றொறு சான்று.

To read this explanation in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: 10.07.2009. 11:49 Views: 570

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top