110. மாற்றப்பட்ட கலாலா சட்டம்

110. மாற்றப்பட்ட கலாலா சட்டம்

சந்ததி இல்லாதவர் "கலாலா' எனப்படுவர். இத்தகையோர் சகோதர, சகோதரிகளை விட்டுச் சென்றால் எவ்வாறு பங்கிட வேண்டும் என்று இவ்வசனம் (4:12) கூறுகிறது.

ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள் என்று இவ்வசனம் கூறுகிறது.

ஆனால் இதே அத்தியாயத்தின் 176வது வசனத்தில் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் பாகம் வேறு விதமாகக் கூறப்படுகிறது.

பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (திருக்குர்ஆன் 4:176)

ஒரு சகோதரனோ ஒரு சகோதரியோ இருந்தால் சகோதரிக்கு ஆறில் ஒரு பங்கு என்று 4:12 வசனம் கூறுகிறது.

ஒரு சகோதரி இருந்தால் மொத்தச் சொத்தில் பாதி என்று 4:176 வசனம் கூறுகிறது.

இரண்டும் முரண்படுவதால் பலரும் பலவிதமான விளக்கத்தை கூறியுள்ளனர்.

"கலாலா' என்ற சொல்லுக்கு இந்த வசனத்தில் வேறு விளக்கமும், 176வது வசனத்தில் வேறு விளக்கமும் கூறியுள்ளனர். இது தவறாகும்.

"கலாலா' என்ற சொல்லுக்கு சந்ததியில்லாமல் சகோதர சகோதரிகளை விட்டுச் செல்பவர் என்று 176வது வசனத்தில் அல்லாஹ்வே விளக்கம் கூறி விட்டதால் மற்றவர்கள் கூறும் விளக்கத்தை நாம் ஏற்கக் கூடாது.

சந்ததிகள் இல்லாமல் சகோதர சகோதரிகளை விட்டுச் செல்பவரைப் பற்றித் தான் இரண்டு வசனங்களும் கூறுகின்றன. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அப்படியானால் இரண்டு வசனங்களிலும் வெவ்வேறு அளவுகள் ஏன் கூறப்படுகின்றன? இதற்கு புகாரியில் இடம் பெற்ற ஹதீஸ் (4605) விடையளிக்கிறது.

திருக்குர்ஆனில் கடைசியாக அருளப்பட்ட வசனம் 4:176 வசனம் தான் என்று பரா பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 4605)

எனவே 4:176 வசனத்தில் இறுதியாகக் கூறப்பட்ட சட்டம் 4:12 வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மாற்றி விட்டது என்பதே சரியாகும்.

இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ்களை ஏற்க மாட்டோம் என்று சிலர் கூறி வருகின்றனர்.

அவர்களால் இந்த முரண்பாட்டுக்கு திருக்குர்ஆன் வசனங்களின் துணை யுடன் விளக்கம் தரவே முடியாது. ஹதீஸ்களில் தான் வசனங்கள் எப்போது அருளப்பட்டன என்ற விபரங்கள் கிடைக்கும்.

10.07.2009. 11:32




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
85 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி