105. ஏடுகளையும், வேதத்தையும்
105. ஏடுகளையும், வேதத்தையும்
இறைத் தூதர்கள் மூன்று விஷயங்களைக் கொண்டு வந்ததாக இவ்வசனங்கள் (3:184, 16:44, 35:25) கூறுகின்றன.
* தம்மை இறைத் தூதர் என நிரூபிக்கத் தேவையான தெளிவான சான்றுகள்! (அதாவது அற்புதங்கள்)
* ஏடுகள்!
* ஒளி வீசும் வேதம்!
ஆகிய மூன்றையும் இறைத் தூதர்கள் கொண்டு வந்துள்ளனர்.
இறைத் தூதர்கள் வேதத்தை மட்டுமின்றி ஏடுகளையும் கொண்டு வந்தனர் என்று கூறப்படுவது ஏன் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
வேதத்தை மட்டுமின்றி வேதத்துக்கு விளக்கமான ஏடுகளையும் அவர்கள் கொண்டு வந்தனர் என்பதைத் தவிர இதற்கு வேறு கருத்து இருக்க முடியாது. திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கான விளக்கமும் இறைவனால் அளிக்கப்பட்டதே என்பதற்கான சான்றுகளில் இவ்வசனமும் ஒன்றாகும்.
10.07.2009. 11:24
