உங்கள் தமிழாக்கத்தில் அதன் மூலம் என்

உங்கள் தமிழாக்கத்தில் அதன் மூலம் என்பதை இருட்டடிப்புச் செய்து விட்டது ஏன்
2:102 வசனவசனத்தில் அதன் மூலம் என்ற சொல்லுக்கு நீங்கள் தமிழாக்கம் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். அது ஏன்? அதன் மூலம் என்றால் எதன் மூலம்?

நூர்

பதில் :

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அதன் மூலம் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

அல்குர்ஆன் (2 : 102)

இந்த வசனத்தில் நாம் கோடிட்டுக்காட்டியுள்ள இடத்தில் அதன் மூலம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னால் சூனியத்தைப் பற்றி பேசப்படுவதால் அல்லாஹ்வின் விருப்பமின்றி சூனியத்தின் மூலம் அவர்களால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பது இதன் பொருள்.

அதன் மூலம் என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் திருக்குர்ஆனில் பிஹி என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நமது தர்ஜுமாவில் இவ்வார்த்தை மொழிபெயர்க்கப்படாமல் தவறுதலாக விடுபட்டுள்ளது. இப்போது ஒன்பதாவது பதிப்பில் அது சரி செய்யப்பட்டு விட்டது.

அதன் மூலம் அதாவது சூனியத்தின் மூலம் என்ற வாசகத்தை இங்கே கூறினாலோ கூறாமல் விட்டாலோ அதனால் இவ்வசனத்தில் பொருள் ஏதும் மாறப் போவதில்லை. என்றாலும் திருக்குர்ஆனில் கூறப்பட்ட எந்த ஒரு வாசகத்தையும் தெரிந்தே மொழிபெயர்க்காமல் விடுவது கூடாது.

பிஹி என்ற வாசகத்துக்கு அதன் மூலம் என மொழிபெயர்க்கப்படவில்லை என நம் சகோதரர்கள் நமது கவனதுக்குக் கொண்டு வந்தவுடன் இதை நாம் திருத்திக் கொண்டோம். ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுத்தித் திரிபவர்கள் இவ்வார்த்தையை நாம் தவறுதலாக விட்டதற்குப் பல்வேறு விதமான உள்நோக்கங்களைக் கற்பித்து வருகின்றனர். அவர்களுக்கு இறைவன் நேர்வழி காட்டுவானாக.

இவ்வசனத்துக்கு ஏற்கனவே நமது இணையதளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது. பார்க்க

11.07.2010. 16:39

திருத்தங்கள்

திருத்தங்கள்

திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் எட்டாவது பதிப்பு இதுவரை நம் கவனத்துக்கு வந்த பிழைகளைச் சரி செய்யும் வகையிலும், அதிக விபரங்கள் அளிக்கும் வகையிலும் புதிதாகவே கம்போஸ் செய்யப்பட்டது. இதன் காரணமாக சில சொற்பிழைகள் இந்தப் பதிப்பில் ஏற்பட்டு விட்டது. முந்தைய பதிப்பில் சரியாக இருந்த இடங்களில் கூட பிழை ஏற்பட்டுள்ளன.

அல்லாஹ் தன் வேதத்தைத் தவிர வேறு எந்த நூலுக்கும் தவறுகள் அற்றது என்ற தகுதியை வழங்க மறுக்கிறான்.

அத்தகைய தவறுகள் இணைய தளத்தில் வெளியிட்ட தமிழாக்கத்தில் உடனுக்குடன் இன்ஷா அல்லாஹ் திருத்தப்படும். ஆனாலும் நூல் வடிவில் வாங்கியவர்களின் பிரதிகளில் அந்தத் தவறுகளை சம்மந்தப்பட்டவர்களே திருத்திக் கொள்வதற்காக அந்தத் திருத்தங்கள் வெளியிடப்படுகிறது. அவ்வபோது பார்த்து தங்கள் பிரதிகளில் திருத்திக் கொள்ளுங்கள். மெல்லிய காகிதமாக உள்ளதால் உறிஞ்சப்படாத மை கொண்டு திருத்தம் செய்யவும்.

திருத்தம் 1

விளக்கங்கள் பகுதியில் இடம் பெற்ற
50. நபிவழியும் மாற்றப்பட்ட நோன்பின் சட்டமும் என்ற தலைப்பில் பின்வரும் இரண்டு பாராக்களில் இரவில் என்பதற்கு பதிலாக பகலில் என்று இடம் பெற்றுள்ளது.

பகலில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்ததால் தான் 'இப்போது முதல் குடும்ப வாழ்வில் ஈடுபடலாம்' எனக் கூறி தடையை அல்லாஹ் நீக்குகிறான்.

நோன்புக் காலத்தில் பகலில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை இருந்ததையும், அந்தத் தடை இப்போது முதல் நீக்கப்படுகிறது என்பதையும் இம்மூன்று சொற்றொடர்களைப் பயன்படுத்தி அல்லாஹ் கூறுகிறான்.

இவ்விரு பாராக்களிலும் பகலில் என்பதை இரவில் என்று திருத்திக் கொள்க!

இது முந்தைய பதிப்புகளில் சரியாக இருந்தது.

திருத்தம்-2

பொருள் அட்டவனை பொறுமை என்ற தலைப்பில்

பிறர் தரும் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்வது - 3:186, 6:34, 14:12, 30:130, 38:17, 41:35, 42:43, 50:39, 73:10 என்ற பாராவில்

30:130 என்பதை 20:130 எனத் திருத்திக் கொள்க

திருத்தம் 4

பின் வரும் வசனத்தில் அதன் மூலம் என்ற சொல் மொழிபெயர்க்கப்படாமல்
விடுபட்டுள்ளது. இதை இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
எனவே இவ்வாறு திருத்திக் கொள்க!

102. ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள்5 கூறியதை இவர்கள் பின்பற்றி னார்கள். (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்பட வில்லை.28 ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத்395 என்ற ஷைத்தான்களே5 மறுத்தனர். 'நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவைனை) மறுத்து விடாதே!' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். 'இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

இணைய தளத்தில் திருத்தப்பட்டு விட்டது. தமிழாக்கம் நூல் வைத்திருப்பவர்கள் இவ்வாறு திருத்திக் கொள்க

திருத்தம் 5

எட்டாவது பதிப்பில் 721 ஆம் பக்கத்தில் 56 வது வசனத்தில் முதல் வரி அரபு மூலத்தில் விருபட்டுள்ளது. ஒவ்வொரு வசனமும் தனித்தனி இமேஜ் ஃபைலாக இருந்ததால் பேஜ்மேக்கரில் அதை கீழிருந்து மேலாக இழுத்து சுருக்கும் போது ஒரு வரி மறைந்து விட்டது. இமேஜ் ஃபைலாக இருந்ததால் அந்த வரி மறைந்ததை நாம் அறிய முடியவில்லை. எனவே விடுபட்ட வரியை மட்டும் ஸ்டிக்கராக அச்சிட்டு எட்டாவது பதிப்புடன் சேர்த்து வழங்கி வருகிறோம். இந்தத் தவறு கண்டு பிடிக்கப்படும் முன்னர் வாங்கியவர்கள் இந்த பக்கத்தை பிரின்ட் எடுத்து ஒட்டிக் கொள்ளவும். அல்லது மூன் பப்ளிகேஷன்ஸுக்கு எழுதி அந்த ஸ்டிக்கர் வாங்கிக் கொள்ளவும்

55 வது வசனத்துக்கும் 56 வது வசனத்துக்கும் இடையில் அந்த வரியை ஒட்டிக் கொள்ளவும்.
ஏழாம் பதிப்பு வைத்திருப்பவர்கள் அதில் உள்ள இதே பக்கத்தை ஜெராக்ஸ் எடுத்து ஒட்டிக் கொள்ளலாம்.











இப்படி சரியாக அச்சாக வேண்டியது

இப்படி சிவப்பு கோடுக்கு கீழே உள்ள வரி மட்டும் அச்சாகாமல் விடுபட்டுள்ளது

திருத்தம் - 6


422 வது குறிப்பில்
இவ்வசனத்தில் (54:2) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.

என்று அச்சாகி உள்ளது

அதை 54:1 என்று திருத்திக் கொள்ளவும் சுட்டிக்காட்டிய அப்துல் காதிருக்கு நன்றி

திருத்தம் - 7


கீழ்க்காணும் வசனங்களில் 432 என்ற குறிப்பு எண் போடப்பட்டுள்ளது. அதை 429 என்று திருத்திக் கொள்ளவும்

2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:19, 39:6, 57:9, 65:11,

மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் 432 என்ற எண் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் 429 என்று மாற்றிக் கொள்ளவும்.

21:63 என்ற வசனத்துக்கு மட்டுமே 432 என்ற எண் உரியது

திருத்தம் - 8

assalamualaikum,unggal quran tamil akathil surah 16:124 lil meen endra oru varthai iruku.en nanbar oruvar meen endra sol arabi mulathil illai endru solli sila tharjumavai ennidam kadinar antha tharjumakalil meen endra sol illai.saudi tamil tharjumavil mandrum meen endra sol( brakettil) iruku.meen endra sol arabu mulathil iruka
மூலத்தில் ஸப்த் + அல் சேர்த்து அஸ்ஸப்த் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸப்த் என்றால் சனிக்கிழமை என்பது பொருள். அஸ்ஸப்த் என்றால் அந்த சனிக்கிழமை என்பது பொருள். இதன் நேரடிப் பொருள் அவருக்கு முரண்பட்டோர் மீதே அந்த சனிக்கிழமை இருந்தது. கியாமத் நாளில் உமது இறைவன் அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். சனிக்கிழமை மீன் பிடிக்கக் கூடாது என்ற சட்டத்தைத் தான் இவ்வாறு குர்ஆன் கூறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் மூலத்தில் இல்லாததால் அதை அடைப்புக் குறிக்குள் தான் நாம் போட்டிருக்க வேண்டும். உங்கள் நண்பர் கூறுவது சரிதான். அடுத்த பதிப்பில் அடைப்புக்குறிக்குள் போடுகிறோம்.

அவருக்கு முரண்பட்டோர் மீதே சனிக்கிழமை (மீன் பிடிக்கக் கூடாது என்ற சட்டம்) இருந்தது. கியாமத் நாளில் உமது இறைவன் அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.

02.10.2009. 23:12




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
102 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி