அத்தியாயம் : 106
அத்தியாயம் : 106
குரைஷ்- ஒரு கோத்திரத்தின் பெயர்
மொத்த வசனங்கள் : 4
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குரைஷ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1, 2, 3. குரைஷிகளை மகிழ்வித்ததற் காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின்33 இறைவனை அவர்கள் வணங்கட்டும்.26
4. பசியின் போது அவர்களுக்கு அவன் உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.34
09.07.2009. 07:38
