அத்தியாயம் : 95
அத்தியாயம் : 95
அத்தீன்- அத்தி
மொத்த வசனங்கள் : 8
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .
1. அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!
2. தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக!
3. அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!34
4. மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
5. பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.
6. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூலி உண்டு.
7. இதன் பின்னர் தீர்ப்பு நாளை1 உம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்?
8. தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?
To read this Chapter in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: July 9, 2009, 4:54 PM Views: 565

