அத்தியாயம் : 86

அத்தியாயம் : 86

அத்தாரிக் - விடிவெள்ளி

மொத்த வசனங்கள் : 17

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக!

2. தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?

3. அது ஒளி வீசும் நட்சத்திரம்.

4. ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.

5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும்.

6. குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.

7. அது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.231

8. இவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.

9. அந்நாளில் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.

10. அவனுக்கு எந்த வலிமையும் இருக்காது. எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள்.

11. திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!149

12. பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக!

13. இது தெளிவான கூற்றாகும்.

14. இது கேலிக்குரியதல்ல.

15. அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர்.

16. நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன்.6

17. எனவே (என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக!

 

09.07.2009. 06:35




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
83 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி