அத்தியாயம் : 102
அத்தியாயம் : 102
அத்தகாஸுர்- அதிகம் தேடுதல்
மொத்த வசனங்கள் : 8
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தகாஸுர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .
1, 2. மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.26
3, 4. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின் னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள்.
5, 6. அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.26
7. பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள்.
8. பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
To read this Chapter in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: July 9, 2009, 5:04 PM Views: 604

