அத்தியாயம் : 78

அத்தியாயம் : 78

அந்நபா - அந்தச் செய்தி

மொத்த வசனங்கள் : 40

இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?

2, 3. எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!26

4. அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.

5. பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.

6, 7. பூமியைத் தொட்டிலாகவும்,284 மலைகளை முளைகளாகவும்248 நாம் ஆக்கவில்லையா?26

8. உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்.

9. உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.

10. இரவை ஆடையாக்கினோம்.

11. பகலை வாழ்வதற்கான நேரமாக ஆக்கினோம்.

12. உங்களுக்கு மேல் பலமான ஏழினை (ஏழு வானங்களை) அமைத்தோம்.

13. ஒளி வீசும் விளக்கையும் ஏற்படுத்தினோம்.

14, 15, 16. தானியத்தையும், தாவரத்தையும், அடர்த்தியான சோலைகளையும் நாம் வெளிப்படுத்துவதற்காக கார் மேகங்களிலிருந்து அதிகமான நீரை இறக்கி வைத்தோம்.26

17. தீர்ப்பு நாள்1 நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.

18. ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.

19. வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும்.

20. மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராக ஆகும்.

21, 22. வரம்பு மீறியோரின் தங்கு மிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.26

23. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.

24. அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.

25. கொதி நீரையும், சீழையும் தவிர.

26. இது செயலுக்கேற்ற கூலி!

27. அவர்கள் விசாரணையை நம்பாதிருந்தனர்.

28. நமது வசனங்களை ஒரேயடியாகப் பொய்யெனக் கருதினர்.

29. ஒவ்வொரு பொருளையும் எழுத்தில் நாம் வரையறுத்துள்ளோம்.

30. சுவைத்துப் பாருங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டோம்.

31, 32, 33, 34. இறையச்சமுடையோருக்கு வெற்றித் தலமும், தோட்டங்களும், திராட்சைகளும், சம வயதுடைய கட்டழகியரும், நிரம்பிய கிண்ணங்களும் உண்டு.26

35. அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.

36. இது உமது இறைவனிடமிருந்து கணக்கிட்டு வழங்கப்பட்ட கூலி.

37. அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்; அளவற்ற அருளாளன். அவனிடம் உரையாடவும் அவர்களுக்கு இயலாது.

38. ரூஹும், வானவர்களும் அணிவகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.

39. இதுவே உண்மையான நாள்!1 விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்.

40. சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான்.

 

09.07.2009. 06:24




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
89 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி