அத்தியாயம் : 93

அத்தியாயம் : 93

அல்லுஹா - முற்பகல்

மொத்த வசனங்கள் : 11

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்று இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. முற்பகல் மீது சத்தியமாக!

2. ஒதுங்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக!

3. (முஹம்மதே!) உமது இறைவன் உம்மைக் கை விடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.

4. இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.

5. (முஹம்மதே!) உமது இறைவன் உமக்கு வழங்குவான். நீர் திருப்தியடைவீர்.

6. உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?

7. உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழி காட்டினான்.81

8. உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.

9. எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!

10. யாசிப்பவரை விரட்டாதீர்!

11. உமது இறைவனின் அருட்கொடையை அறிவிப்பீராக!

 

09.07.2009. 07:21




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
91 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி