அத்தியாயம் : 101
அத்தியாயம் : 101
அல் காரிஆ- திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி
மொத்த வசனங்கள் : 11
இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக அல் காரிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆக்கப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .
1. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி!
2. அது என்ன திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி?
3. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
4. அந்நாளில்1 மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போல் ஆவார்கள்.
5. மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.
6, 7. யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.26
8, 9. யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.26
10. ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
11. (அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்.
To read this Chapter in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: 09.07.2009. 07:32 Views: 570

