அத்தியாயம் : 88

அத்தியாயம் : 88

அல்காஷியா - சுற்றி வளைப்பது

மொத்த வசனங்கள் : 26

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே பெயராக வைக்கப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. சுற்றி வளைக்கும் நிகழ்ச்சி பற்றி உமக்குச் செய்தி கிடைத்ததா?

2. அந்நாளில் சில முகங்கள் (அவமானத்தால்) பணிவுடன் இருக்கும்.

3. அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.

4. சுட்டெரிக்கும் நெருப்பில் அவை கருகும்.

5. கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.

6. முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.

7. அது கொழுக்க வைக்காது; பசியையும் நீக்காது.

8. அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும்.

9. தமது உழைப்பிற்காகத் திருப்தி கொள்ளும்.

10. உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கும்.

11. அங்கே அவை வீணானதைச் செவியுறாது.

12. அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.

13. அங்கே உயர்ந்த கட்டில்கள் உள்ளன.

14. குவளைகள் வைக்கப்பட்டிருக்கும்.

15. வரிசைப்படுத்தப்பட்ட தலையணைகளும் உள்ளன.

16. விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு.

17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?399

18. வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?

19. மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?

20. பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)

21. எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.81

22. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர்.81

23, 24. எனினும், புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான்.26

25. அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது.

26. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.

 

09.07.2009. 06:37




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
84 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி