அத்தியாயம் : 105
அத்தியாயம் : 105
அல் ஃபீல்- யானை
மொத்த வசனங்கள் : 5
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் யானை என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?
2. அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா?
3. அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.
4. சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின.
5. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.355
09.07.2009. 07:37
