அத்தியாயம் : 90

அத்தியாயம் : 90

அல்பலது - அந்த நகரம்

மொத்த வசனங்கள் : 20

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1, 2. (முஹம்மதே!) இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.26

3. பெற்றவன் மீதும், அவன் பெற்றெடுத்ததன் மீதும் சத்தியமாக!

4. மனிதனைக் கஷ்டப்படுபவனாகவே படைத்துள்ளோம்.

5. தன் மீது யாரும் சக்தி பெறமாட்டார்கள் என்று அவன் எண்ணுகிறானா?

6. "ஏராளமான செல்வத்தை (கொடுத்து) அழித்து விட்டேன்'' எனக் கூறுகிறான்.

7. அவனை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?

8, 9. அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா?26

10. (நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?

11. அவன் கணவாயைக் கடக்கவில்லை.

12. கணவாய் என்பது என்ன வென்பது உமக்கு எப்படித் தெரியும்?

13, 14, 15, 16, 17. அடிமையை விடுதலை செய்தல், நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்).

18. அவர்களே வலப்புறத்தார்.

19. யார் நமது வசனங்களை மறுக்கிறார் களோ அவர்களே இடப்புறத்தார்.

20. அவர்கள் மீது மூட்டப்பட்ட நெருப்பு இருக்கும்.

 

09.07.2009. 06:40




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
86 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி