அத்தியாயம் : 87

அத்தியாயம் : 87

அல்அஃலா - மிக உயர்ந்தவன்

மொத்த வசனங்கள் : 19

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

2. அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான்.

3. அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.

4. அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான்.

5. பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான்.

6, 7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம்.152 & 312 நீர் மறக்க மாட்டீர்.220 அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.26

8. (முஹம்மதே!) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம்.

9. அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக!

10. (இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.

11. துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான்.

12. அவனே பெரும் நெருப்பில் கருகுவான்.

13. பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.

14. தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.

15. அவன், தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான்.

16. ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள்.

17. மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.

18, 19. இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.26

 

09.07.2009. 06:36




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
89 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி