அத்தியாயம் : 96

அத்தியாயம் : 96

அல் அலக்- கருவுற்ற சினை முட்டை

மொத்த வசனங்கள் : 19

இந்த அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில் அலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!281

2. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.365

3. ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.

4. அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான்.

5. அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.

6, 7. அவ்வாறில்லை! தன்னைத் தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான்.26

8. உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.

9, 10. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?26&32

11, 12, 13. அவர் நேர்வழியில் இருப்பதையும் அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?26

14. அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

15. அவ்வாறில்லை! அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம்.

16. அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி.426

17. அவன் தனது சபையோரை அழைக்கட்டும்.

18. நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.

19. எனவே, அவனுக்குக் கட்டுப்படா தீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!396

 

09.07.2009. 07:25




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
100 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி