அத்தியாயம் : 84

அத்தியாயம் : 84

அல்இன்ஷிகாக் - பிளந்து விடுதல்

மொத்த வசனங்கள் : 25

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. வானம் பிளந்து விடும் போது,

2. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும் போது,

3. பூமி நீட்டப்படும் போது,

4. தன்னிடம் உள்ளதை வெளிப்படுத்தி அது வெறுமையாகி விடும் போது,

5. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும் போது,

6. மனிதனே! உனது இறைவனை நோக்கிக் கடுமையாக முயற்சிக்கிறாய். எனவே அவனைச் சந்திப்பாய்.

7, 8. யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.26

9. அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார்.

10, 11. முதுகுக்குப் பின் புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.26

12. நரகிலும் கருகுவான்.

13. அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

14. "தான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்'' என்று அவன் எண்ணினான்.

15. அவ்வாறில்லை! அவனது இறைவன் அவனைப் பார்ப்பவனாக இருந்தான்.

16. அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.

17, 18. இரவின் மீதும் அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக!

19. நீங்கள் படிப்படியாக ஏறிச் செல்வீர்கள்.

20. அவர்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க என்ன நேர்ந்தது?

21. அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக் காட்டப்படும் போது ஸஜ்தாச் செய்வதில்லை.396

22. மாறாக (ஏக இறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுகின்றனர்.

23. அவர்கள் மறைப்பதை அல்லாஹ் அறிவான்.

24. எனவே அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை எச்சரிப்பீராக!

25. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.

 

09.07.2009. 06:32




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
101 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி