அத்தியாயம் : 89

அத்தியாயம் : 89

அல்ஃபஜ்ரு - வைகறை

மொத்த வசனங்கள் : 30

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராகச் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. வைகறையின் மீது சத்தியமாக!

2. பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!387

3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக!

4. கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக!

5. அறிவுடையோருக்கு (போதிய) சத்தியம் இதில் இருக்கிறதா?

6, 7. ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?26

8. உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை.

9, 10. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூது சமுதாயத்தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?) 26

11. அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்.

12. அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள்.

13. எனவே உமது இறைவன் வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.

14. உமது இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.

15. மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது "என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்'' என்று கூறுகிறான்.

16. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.

17. அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை.

18. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை.

19. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள்.

20. செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.

21. அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது,

22. வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது,

23. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?

24. "எனது வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா?'' என்று கூறுவான்.

25. அந்நாளில் அவன் தண்டிக்குமளவுக்கு யாரும் தண்டிக்க முடியாது.

26. அவன் கட்டுவது போல் யாரும் கட்ட முடியாது.

27, 28. அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக!

29. எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக!

30. எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்.)

 

09.07.2009. 06:39




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
103 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி